நெல்லிக்காய் பயன்கள் மற்றும் தீமைகள் | Nellikai Benefits in Tamil, நெல்லிக்காய் மருத்துவ பயன்கள்
நெல்லிக்காய் நெல்லிக்கையானது தமிழ்நாடு முழுவதும் காடுகளில் வளர்கின்றது. இதுமட்டும் அல்லாமல் நெல்லிக்கையானது வீட்டு தோட்டங்களிலும் மற்றும் தோப்புகளிலும் விளையும் மரங்கள் மற்றும் பெரிய கனிகளுடன் சேர்த்து காணப்படுகின்றன. இந்த நெல்லிக்கையானது புளிப்பு, இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவைகளைக் கொண்டது. நெல்லிக்கையானது குளிர்ச்சி தன்மை உடையது. நெல்லிக்கையானது கண்களுக்கு குளிர்ச்சி தரும். செரிமானத்தை தூண்டும். குடல் வாயுவே அகற்றும் மற்றும் பேதியை தூண்டும். இதுமட்டும் அல்லாமல் நெல்லிக்கையானது உடல் சூடு,எலும்புருக்கி நோய் மற்றும் வாந்தி, வெள்ளை போன்றவைகள் குணமாக்கும் தன்மை உடையது. நெல்லிக்காய் பயன்கள் நெல்லிக்காயை அதிகம் சாப்பிட்டால் தோலில் உள்ள செல்கள் புத்துணர்வு பெற்று ரத்த ஓட்டத்தை நன்கு தூண்டி தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்கும் மற்றும் இளமையான தோற்றத்தை நீட்டிக்க செய்கிறது. நெல்லிக்காயில் விட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளதால் சருமத்திற்கு இலகுவான தன்மையை தருவதோடு தோல் புற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. நெல்லிக்காயை வாரத்திற்கு ஒரு முறை சாப்பிடுவதால் உங்க...