பூனைக்காலி விதை பயன்கள் பூனைக்காலி விதை பொடி செய்யும் முறை இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம்.
பூனைக்காலி விதை பொடி பயன்கள் | Poonaikali Vidhai Benefits in Tamil பூனைக்காலி விதையை சித்த மருத்துவத்தில் அதிகமாக பயன்படுத்தக்கூடிய மூலிகையாகும். பூனைக்காலி விதை என்பது அதிக வெப்பம் உள்ள பகுதியில் வளரக்கூடியது. இந்த விதையின் பூவானது காய்த்து ஒவ்வொரு காயிலும் 7 விதைகள் இருக்கும். காய்களின் மேல் புறம் மென்மையான சுனை போன்று இருக்கும். அதனால் இதற்கு இது வெல்வெட் பீன் என்று பெயர் வைத்து அழைக்கிறார்கள். இவை மென்மையாக இருந்தாலும் உடலில் பட்டால் நமைச்சலை ஏற்படுத்தும். இந்த பதிவில் பூனைக்காலி விதையில் எப்படி பொடி தயாரிக்கலாம், பூனைக்காலி விதையானது எந்த மாதிரியான நோய்களை குணப்படுத்தும் என்பதை இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம்.. பூனைக்காலி விதை பொடி செய்யும் முறை: பூனைக்காலி விதை தண்ணீர்விட்டான் கிழங்கு நிலப்பனை கிழங்கு நத்தை சூரி விதை சாலாமிசிரி சிறுபீளை அமுக்கிரான் கிழங்கு மேல் கூறிய அனைத்தையும் சமமான அளவிற்கு எடுத்து நன்றாக சுத்தம் செய்து பொடி செய்துக்கொள்ளவும். இந்த பவுடரை தினமும் அரை டீஸ்பூன் அளவு எடுத்து அரை டம்ளர் அளவு வெதுவெதுப்பான நீரில் கலந்து 21 நாட்கள் வரை எடுத்துக்கொள்ள ...