Posts

Showing posts from January, 2025

வில்வ இலையில் உள்ள நன்மைகள் வில்வ இலையானது நம் உடலில் பல பிரச்சனைகளுக்கு மருந்தாக இருக்கிறது என்பதை காண்போம்.

Image
  Vilvam Leaf Benefits in Tamil பொதுவாக நாம் அறிந்த வகையில், இந்த மரம் பல ஆயிரம் ஆண்டுகளாக புனிதமானதாக போற்றப்படுகிறது என்பதையும், சிவனுக்கு அர்ப்பணம் செய்யப்படும் மலர்களாக மட்டுமல்லாமல், வில்வ இலைகள் இல்லாமல் பூஜை முழுமை அடையாது என்பதையும் நாம் அறிந்தது, ஆனால் வில்வ இலையானது பூஜைகளுக்கு மட்டுமில்லாமல் மருத்துவ குணங்களும் நிறைந்தது என்று எத்தனை நபர்களுக்கு தெரியும். வில்வ இலையானது நம் உடலில் பல பிரச்சனைகளுக்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது. இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் மலசிக்கல் பிரச்சனை இருக்காது. இன்னும் பலபிரச்சனைகளை சரி செய்ய கூடியது. இதனை பற்றிய முழு விவரத்தையும் அறிந்து கொள்வோம். மூச்சுத்திணறல்: சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஆஸ்துமா பிரச்சனையினால் மூச்சுவிடுவதற்கு சிரமப்படுகின்றனர். இதற்கு வில்வ இலை நீரை குடித்து வரலாம். ஒரு சொம்பு தண்ணீரில் 10 வில்வ இலைகளை சேர்த்து கொள்ள வேண்டும். இதனை ஒரு நாள் இரவு முழுவதும் ஊற விட வேண்டும். காலையில் இந்த நீரை குடித்து வந்தால் மூச்சு திணறல் பிரச்சனை இருக்காது. பூச்சி இல்லாமல் இருக்க: குடலில் பூச்சிகள் இருந்தால் சரியாக பசிக்...

கரும்பு சாறு குடித்தால் உடலிற்கு இவ்வளவு நன்மைகளா..! Sugarcane Juice Benefits What Benefits of Sugarcane Juice Tamil.

Image
  Sugarcane Juice Benefits in Tamil கரும்பு என்பது சர்க்கரையை உற்பத்தி செய்யும் தாவரமாகும். கரும்பில் பல வகைகள் உள்ளது. அவற்றில் நம்மில் பலபேருக்கு தெரிந்தது பொங்கல் கரும்பு மற்றும் ஆலை கரும்பு தான். உலகிலேயே . பிரேசில் நாடு தான் அதிக கரும்பு உற்பத்தி செய்யும் நாடாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து இந்தியா, சீனா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் உள்ளது. ஜீனி செய்வதற்கு மட்டுமே கரும்பு அதிகமாக பயன்படுகிறது. மேலும், வருடத்திற்கு ஒருமுறை வரும் பாரம்பரிய பொங்கல் விழாவில் அதிகம் விற்பனையாவது கரும்பு தான். அதுமட்டுமில்லாமல், சாலையோரங்களில் பல இடங்களில் கரும்பு ஜூஸ் கிடைக்கிறது. கரும்பு ஜூஸ் என்றாலே குழந்தைகள முதல் பெரியவர்கள் வரை அதிகம் விரும்பி குடிப்பார்கள். முக்கியமாக, வெயில் காலங்களில் கரும்பு ஜூஸின் பயன்பாடு அதிமாக இருக்கும். ஆகையால், கரும்பு ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை இப்பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க. What Benefits of Sugarcane Juice in Tamil: கரும்புச்சாற்றில் சுமார்  70-75 % நீர், 10-15 % நார்ச்சத்து மற்றும் 13-15 % சுக்ரோஸ்  உள்ளது. உ...

வந்தாச்சு பொங்கல்... பனங்கிழங்கு எடு கொண்டாடு - கொட்டிக்கிடக்கும் சத்துக்கள் என்னென்ன? பனங்கிழங்கு மருத்துவ பயன்கள் | Pana Kilangu Benefits

Image
  பனங்கிழங்கு எடு கொண்டாடு Pongal Special 2025:  பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. மார்கழி கடைசி நாளான இன்று போகி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தை முதல் நாளான நாளை சூரிய பொங்கல் அதாவது தை பொங்கல் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. தமிழர்களின் பண்பாடு போற்றும் இந்த பண்டிகையில், சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு அறுவடை திருநாளாக பொங்கல் கொண்டாடப்படுகிறது. தை பொங்கலுக்கு பானையில் பொங்கல் வைத்து, காய்கறிகள், கிழங்கு வகைகள் ஆகியவற்றை படையலிட்டு சூரிய பகவானை நோக்கிய வழிபாடும் நடைபெறும். அந்த வகையில், பொங்கல் என்றால் கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொருள்கள்தான் நினைவுக்கு வரும். அதேபோல், பல பேருக்கு பொங்கல் என்றாலே பனங்கிழங்கும், அதன் ருசியும் சட்டென அவர்களின் மூளைக்கு எதிரொலிக்கும் எனலாம். பொங்கல் படையலை சாப்பிட்ட பின்னர், உறவினர்கள் நண்பர்களுடன் அமர்ந்து கரும்பு சாப்பிடுவது ஒருபுறம் என்றால், வீட்டில் உள்ள பெரியவர்கள் பனங்கிழங்கை அவித்து, அதனை வீட்டில் உள்ள இளையோருக்கு உணவுக்கு பின் கொடுப்பதும் வாடிக்கைதான்.  பொங்கல் பண்டிகை  விடுமுறையின் போது யாரெல்லாம் வீட்டுக்க...

வாழைத்தண்டு: சிறுநீரக கல் முதல் நீரிழிவு வரை! தம்மாத்தூண்டு தண்டுல இவ்வளவு விஷயம் இருக்காமே!

Image
வாழை மரம். ஒரு பொருள் சற்றும் வீணாகாமல் நம்மால் பயன்படுத்த முடியும் என்றால் அது வாழை மட்டும் தான். வாழை இலை, வாழைத்தண்டு, வாழைப்பூ, வாழைக்காய், வாழைப்பழம் என எல்லாமே நிறைவான நன்மைகளை தரக்கூடியவை. இதன் ஒவ்வொரு பகுதியும் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நன்மைகளால் நிறைந்துள்ளது. வாழை இலையில் சாப்பிடுவதன் மூலம் செரிமானம் சீராகும். வாழைப்பழங்கள் பொட்டாசியம் மற்றும் வைட்டமின்களின் சிறந்த மூலம். வாழைப்பூ நீரிழிவு மற்றும் வயதான எதிர்ப்பு குணங்களுக்கு நன்மை செய்கிறது. இதன் வரிசையில் வாழைப்பூவின் நன்மைகள் குறித்து பார்க்கலாம். ​வாழைத்தண்டு வாழைத்தண்டு நார்ச்சத்து அதிகம் நிறைந்தவை இது புண்கள் அல்லது வயிற்றில் அமிலத்துக்கு சிகிச்சை அளிக்க உதவும். வாழைப்பழங்கள் போன்று வாழைத்தண்டுகளும் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி 6 போன்றவற்றை கொண்டுள்ளது. இது உடலில் ஹீமோகுளோபின் மற்றும் இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்துகிறது. இது தசைகள் சேதமில்லாமல் அதன் வளர்ச்சிக்கு உதவுகிறது. வாழைத்தண்டு கூட்டாகவோ. பச்சையாக சாலட் செய்தோ, பொரியலாக்கியோ, எளிதான முறையில் சாறாக்கியோ குடிக்கலாம். வாழைத்தண்டு உடலுக்கு செய்யும் ஆரோக்கியம...