வந்தாச்சு பொங்கல்... பனங்கிழங்கு எடு கொண்டாடு - கொட்டிக்கிடக்கும் சத்துக்கள் என்னென்ன? பனங்கிழங்கு மருத்துவ பயன்கள் | Pana Kilangu Benefits
பனங்கிழங்கு எடு கொண்டாடு
Pongal Special 2025: பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. மார்கழி கடைசி நாளான இன்று போகி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தை முதல் நாளான நாளை சூரிய பொங்கல் அதாவது தை பொங்கல் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. தமிழர்களின் பண்பாடு போற்றும் இந்த பண்டிகையில், சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு அறுவடை திருநாளாக பொங்கல் கொண்டாடப்படுகிறது. தை பொங்கலுக்கு பானையில் பொங்கல் வைத்து, காய்கறிகள், கிழங்கு வகைகள் ஆகியவற்றை படையலிட்டு சூரிய பகவானை நோக்கிய வழிபாடும் நடைபெறும்.
அந்த வகையில், பொங்கல் என்றால் கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொருள்கள்தான் நினைவுக்கு வரும். அதேபோல், பல பேருக்கு பொங்கல் என்றாலே பனங்கிழங்கும், அதன் ருசியும் சட்டென அவர்களின் மூளைக்கு எதிரொலிக்கும் எனலாம். பொங்கல் படையலை சாப்பிட்ட பின்னர், உறவினர்கள் நண்பர்களுடன் அமர்ந்து கரும்பு சாப்பிடுவது ஒருபுறம் என்றால், வீட்டில் உள்ள பெரியவர்கள் பனங்கிழங்கை அவித்து, அதனை வீட்டில் உள்ள இளையோருக்கு உணவுக்கு பின் கொடுப்பதும் வாடிக்கைதான். பொங்கல் பண்டிகை விடுமுறையின் போது யாரெல்லாம் வீட்டுக்கு வருகிறார்களோ அவர்களுக்கு பனங்கிழங்கை சாப்பிடக் கொடுத்து வரவேற்கும் பழக்கமும் அதிகம் உள்ளது.
பனங்கிழங்கை எப்படி சாப்பிடலாம்?
பனங்கிழங்கின் வெளிப்புற தோலை முதலில் உரித்து எடுக்க வேண்டும். அதில் நல்ல கனமான பகுதியுடன் உள்ளே இருக்கும் வேர் போன்ற மெல்லிசான பகுதியை நீக்க வேண்டும். பின்னர், ஒரு விரல் அளவிற்கு வெட்டிக் கொள்ள வேண்டும். அதை நன்றாக நீரில் கழுவி, அதனை அவித்து சாப்பிட வேண்டும். அதனை குக்கரில் வைத்து 6 - 10 விசில் வைத்து இறக்கவும். அதில் சிறிது அளவு மஞ்சள் தூளையும், உப்பையும் சேர்த்துக்கொள்ளலாம்.
பனங்கிழங்கு மருத்துவ பயன்கள் | Pana Kilangu Benefits In Tamil
குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை எல்லோருக்கும் அதிக சத்துக்களைத் தரக்கூடிய பனங்கிழங்கில் இருக்கக்கூடிய மருத்துவ குணங்களைப் பற்றியும் இதை யாரெல்லாம் சாப்பிடலாம் இதை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்க போகிறோம். நாட்டு மருத்துவத்தில் பனங்கிழங்கை அதிக அளவு பயன்படுத்துகிறார்கள்
பனங்கிழங்கு ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கிறது இது பனம் மரத்திலிருந்து கிடைக்கக்கூடிய ஒரு வகை கிழங்கு பனம் பழத்தை சாப்பிட்டு அந்த கொட்டையை தனியா புதைத்து வைத்தால் அதிலிருந்து கிடைக்கக் கூடியதுதான் இந்த பனங்கிழங்கு எண்ணற்ற நன்மைகள் நிறைந்த இந்த பனங்கிழங்கு அடிக்கடி சாப்பிடுவதால் நமக்கு ஏராளமான பலன்கள் கிடைக்கும் அது என்னென்ன என்று பார்க்கலாம். இதில் இரும்பு சத்து அதிகமாக இருக்கு பனங்கிழங்கை வேக வைத்து சின்னதாக கட் பண்ணி எடுத்து அத நல்லா காய வச்சி அதோடு கருப்பட்டி சேர்த்து மாவாக்கி சாப்பிட்டால் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்கும்.
பனங்கிழங்கின் உயிர்ச்சத்துக்கள் அதிகமான அளவில் இருக்கின்றது அதனால் தான் பணக்காரனுக்கும் பசித்தவனுக்கு பனங்கிழங்கு அப்படி என்று பழமொழி கூட இருக்கு இதைத் தொடர்ந்து சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான இரும்பு சத்துக்கள் அதிகமாக கிடைக்கும்.
மருத்துவ பயன்கள்
சர்க்கரை நோய்
பொதுவாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் மண்ணில் விளையக் கூடிய பொருட்களை சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள் ஆனால் பனங்கிழங்ககில் உள்ள வேதிப்பொருட்கள் நம்ம உடம்புல இன்சுலினை சுரக்க வைத்து மற்றும் இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது பனங்கிழங்கை இன்சுலின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது
நீரிழிவு நோய்
இது நீரிழிவு நோயாளிகளுக்கு எந்தவித ஆபத்தை ஏற்படுத்தாது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தாராளமாக அதிகமாக சாப்பிடலாம்.
கர்ப்பப்பை
பெண்கள் கருப்பை பலம் பெற பனங்கிழங்கு மாவை தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டால் உடல் உறுப்புக்கள் பலம் பெறும் இது பெண்களோட கர்ப்பப்பை பலம் அளிக்கக் கூடியதாக இருக்கும். இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடல் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
தலைவலி, வயிற்று வலி மற்றும் உடல் வலி
தலைவலி, வயிற்று வலி மற்றும் உடல் வலி உள்ளவர்கள் அனைவரும் பனங்கிழங்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்சனையில் இருந்து அவர்கள் பூரணமாக குணமடைவார்கள். ஏனென்றால் பணம் கிழங்கில் அதிக அளவு நார்ச்சத்தும் நிறைந்துள்ளது
நோய் எதிர்ப்புச் சக்தி
Pana Kilangu Benefits In Tamil: நோய் எதிர்ப்புச் சக்தி பனங்கிழங்கு அதிக அளவு இருப்பதினால் இதை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிக அளவில் கிடைக்கும் மேலும் மற்ற உடல் உபாதைகளிலிருந்து அவர்கள் ஈடுபடுவார்கள்.
வயிறு மற்றும் சிறுநீர்ப் பிரச்சினை
வயிறு மற்றும் சிறுநீர்ப் பிரச்சினை உள்ளவர்கள் பனங்கிழங்கு மாவினை காலையில் தினமும் பருகி வந்தால் இவர்கள் இந்த பிரச்சனையில் இருந்து பூரணமாக குணமடைந்து நன்றாக வாழலாம்
இரத்தசோகை
Pana Kilangu Benefits In Tamil: இரத்தசோகை பனங்கிழங்கை வேக வைத்து சின்னச் சின்னத் துண்டா நறுக்கி காய வைத்து அத்துடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்கும். இதனால் இரத்த சோகை நோய் உள்ளவர்களுக்கு ரத்த சோகை சம்பந்தமான பிரச்சினைகள் எல்லாம் தீரும்.
மலச்சிக்கல்
மலச்சிக்கல் உள்ளவர்கள் பனங்கிழங்கு தாராளமாக சாப்பிடலாம் மலச்சிக்கல் உள்ளவர்கள் பனங்கிழங்கை வேக வைத்து எடுத்து அதுகூட வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டால் உடனடி தீர்வு கிடைக்கும் இது மலச்சிக்கல் பிரச்சனையை உடனே சரிசெய்யும்.
எலும்புகள்
எலும்புகளுக்கு பலம் அளிக்கக் கூடியதாக இருக்க பனங்கிழங்கு கால்ஷியம் சத்து அதிகமாக இருக்கு பனங்கிழங்கை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் எலும்பு முறிவு சதைச்சுருக்கம் எலும்புகளில் அரிப்பு இந்த மாதிரியான பிரச்சனைகளை தவிர்க்கலாம் இது எலும்புகளுக்கு பலத்தை அளிக்கும்.
இரத்த கொழுப்பு கட்டிகள்
இரத்த கொழுப்பு கட்டிகள் உருவாவதை தடுக்கும் இது உடம்பில் ஏற்பட்ட இரத்தக் கொழுப்பு கட்டிகளை கரைப்பதற்கு பனங்கிழங்கு மிகவும் உதவியாக இருக்கும்.
இருதய நோய்கள்
இதை தொடர்ந்து சாப்பிடுவதால் இருதய நோய்கள் வராமலும் நம்மளை பாதுகாக்க முடியும் இது ஆண்களுடைய ஆண்மைத்தன்மையை அதிகரிக்க பனங்கிழங்கு மிகவூம் உதவுகிறது.
சளி இருமல் காய்ச்சல்
குழந்தைகளுக்கு சளி இருமல் காய்ச்சல் வராமல் தடுக்க இந்த பனங்கிழங்கு மாவு உதவுகிறது. பனங்கிழங்கு மாவு தினமும் குழந்தைகளுக்குக் கொடுத்து கொண்டே வரும்போது குழந்தைகளுக்கு மலச்சிக்கல் சளி இருமல் இந்த மாதிரியான பிரச்சினைகள் வரவே வராது.
வாயு பிரச்சனை
Pana Kilangu Benefits In Tamil: பனங்கிழங்கு அதிகமாக சாப்பிடுவதால் சிலருக்கு வாயு பிரச்சனை ஏற்படலாம் இந்த வாயு பிரச்சனையை தவிர்க்க பனங்கிழங்குகோடு பூண்டு மிளகு உப்பு சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிடலாம். இனிப்புக்கு பனங்கருப்பட்டி போட்டு இடித்து சாப்பிடலாம் அப்படி இல்லையென்றால் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் அளவு பனங்கிழங்கு மாவை எடுத்து மிக்ஸ் பண்ணி அதுல கொஞ்சமா மிளகு போட்டு அதை நாம் குடித்தாள் வாய்வு பிரச்சனை சரியாகும் அப்படி இல்லை என்றால் வெறும் பனங்கிழங்கு சமைத்து சாப்பிடலாம்.
பனங்கிழங்கை சாப்பிடும்போது பித்தம் அதிகரிக்காமல் இருப்பதற்கு பனங்கிழங்கை சமைக்கும்போது அதில் மிளகு, பூண்டு சேர்த்து சாப்பிடலாம் அப்படி இல்லன்னா உடலில் பித்தம் அதிகரிக்கும். பனங்கிழங்கு சாப்பிட்டால் கொஞ்சம் அதிகமாவே இருக்கு அதனால இதை சாப்பிட்ட பிறகு 5 மிளகு சாப்பிடலாம் மத்தபடி பனங்கிழங்கு சாப்பிடுவதால் உடலுக்கு வலு கிடைக்கும் ஆரோக்கியமும் கிடைக்கும்.
உடல் எடை அதிகரிக்க
இதில் மாவுச்சத்து அதிகமான அளவில் இருக்கிறது இதை தொடர்ந்து சாப்பிடுவதால் உடல் மெலிந்தவர்களுக்கு கூட உடல் எடை அதிகரிக்கும் உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் இதை அளவோடு சாப்பிடுவது தான் நல்லது.
உடல் உஷ்ணம் குறைக்க
பனங்கிழங்கு அதிகமான குளிர்ச்சி தன்மை உடையது உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்கள் பனங்கிழங்கு சாப்பிடலாம் இதை தொடர்ந்து சாப்பிடுவதால் உடல் சூட்டால் அவதிப்படுபவர்களுக்கு உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும். குளிர்ச்சியான உடல் உடையவர்கள் பனங்கிழங்கு அதிகமாக பயன்படுத்தக்கூடாது.
Pana Kilangu Benefits In Tamil: இவ்வளவு மரு த்துவ குணங்கள் உள்ள பணம் கிழங்கை எங்கு பார்த்தாலும் வாங்கி சாப்பிடுங்க இதுல அதிகமான மருத்துவ குணங்கள் இருக்கு இப்போ பனங்கிழங்கு அதிகமாகவே கிடைக்கும் மறக்காமல் வாங்கி சாப்பிடுங்கள்.
*********************************************************************************************************
"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"
*********************************************************************************************************


Comments
Post a Comment