நெல்லிக்காய் பயன்கள் மற்றும் தீமைகள் | Nellikai Benefits in Tamil, நெல்லிக்காய் மருத்துவ பயன்கள்
நெல்லிக்காய்
நெல்லிக்கையானது தமிழ்நாடு முழுவதும் காடுகளில் வளர்கின்றது. இதுமட்டும் அல்லாமல் நெல்லிக்கையானது வீட்டு தோட்டங்களிலும் மற்றும் தோப்புகளிலும் விளையும் மரங்கள் மற்றும் பெரிய கனிகளுடன் சேர்த்து காணப்படுகின்றன.
இந்த நெல்லிக்கையானது புளிப்பு, இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவைகளைக் கொண்டது. நெல்லிக்கையானது குளிர்ச்சி தன்மை உடையது.
நெல்லிக்கையானது கண்களுக்கு குளிர்ச்சி தரும். செரிமானத்தை தூண்டும். குடல் வாயுவே அகற்றும் மற்றும் பேதியை தூண்டும். இதுமட்டும் அல்லாமல் நெல்லிக்கையானது உடல் சூடு,எலும்புருக்கி நோய் மற்றும் வாந்தி, வெள்ளை போன்றவைகள் குணமாக்கும் தன்மை உடையது.
நெல்லிக்காய் பயன்கள்
நெல்லிக்காயை அதிகம் சாப்பிட்டால் தோலில் உள்ள செல்கள் புத்துணர்வு பெற்று ரத்த ஓட்டத்தை நன்கு தூண்டி தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்கும் மற்றும் இளமையான தோற்றத்தை நீட்டிக்க செய்கிறது. நெல்லிக்காயில் விட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளதால் சருமத்திற்கு இலகுவான தன்மையை தருவதோடு தோல் புற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. நெல்லிக்காயை வாரத்திற்கு ஒரு முறை சாப்பிடுவதால் உங்களுக்கு முகப்பொலிவு மற்றும் பளபளப்பான சருமத்தை பெறலாம்.
நெல்லிக்காயின் பயன்கள் | Nellikai Benefits
நம் வாழ்வில் இறுதிவரை எலும்புகள் வலுவாக இருக்க வேண்டும் நெல்லிக்காயில் விட்டமின்கள் மற்றும் பொட்டாசியம் கால்சியம் நிறைந்துள்ளது இது எலும்பின் வளர்ச்சிக்கு வழிவகுக்க அவசியம் ஆகிறது எனவே நெல்லிக்காய் வாரம் இருமுறையாவது சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவடையும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது குறிப்பாக வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு நெல்லிக்காய் நல்லது.
நம் அன்றாட இயக்குவதற்கு சக்தி நாம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கிறது அப்படி நாம் உண்ணும் உணவில் இருந்து முழுமையான சக்தியை பெற நமது வயிற்று மற்றும் செரிமான உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் ஒரு சிலர் கண்ட உணவு வகைகளை உண்பதால் வயிற்றில் புண்கள் அஜீரண கோளாறுகள் போன்றவை ஏற்படுகின்றன. தினமும் நெல்லிக்காயை சாப்பிட்டு வருவதால் வயிற்றில் புண்கள் மற்றும் வயிறு சம்பந்தமான பல பிரச்சனைகள் தீர்வு காண்கிறது.
நெல்லிக்காய் மருத்துவ பயன்கள்
| நெல்லிக்காயால் இதய நன்மை |
| நெல்லிக்காய் மஞ்சள் காமாலை நன்மை |
| நெல்லிக்காய் ஏன் சர்க்கரை நோயாளிக்கு நல்லது? |
| நெல்லிக்காய் குழந்தைகளுக்கு நல்லதா? |
நெல்லிக்காயால் இதய நன்மை
நம் உடலில் அனைத்து பகுதிகளுக்கும் ரத்தத்தை பாய்ச்சும் உறுப்பு இதயம். இதயத்தில் செயல்பாடுகள் எப்போதும் சீராக இருக்கின்ற வகையில் உதவக்கூடிய இயற்கை உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும். இந்த நெல்லிக்கனியை அடிக்கடி சாப்பிடும் போது அதில் உள்ள புளிப்பு தன்மை மற்றும் ரசாயனங்கள் இதயத்தில் ரத்தம் ஊறுதல் அடைப்பு போன்றவை ஏற்படுவதே தடுக்கிறது. மேலும் இந்த நெல்லிக்காயில் இருக்கின்ற குரோமியம் சத்து ஆதிராஸ்கிலோ ரேசிஸ் எனப்படும். இதயம் சம்பந்தமான பாதிப்புகள் நெல்லிக்காய் உண்டாக்காமல் தடுக்கிறது.
நெல்லிக்காய் மஞ்சள் காமாலை நன்மை
நம் தினமும் சாப்பிடும் அனைத்து வகையான உணவுகளிலும் ஏதாவது ஒரு சத்துதன்மை நிறைந்துள்ளது. சத்துக்கள் உள்ள உணவை நாம் சாப்பிட்டால் அவற்றை நீக்கி உடலுக்கு நன்மை ஏற்படுத்தும் ஒரு உறுப்பாக கல்லீரல் செயல்படுகிறது. கல்லீரல் என்பது ஆரோக்கியமாக இருப்பது அவசியம் அந்த ஹெட்பாடிட்டிஸ் வைரஸ் கிருமிகளால் பாதிப்பு ஏற்படும் போது மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகின்றது. கல்லீரலில் ஏற்படும் கிருமி தொற்றால் ஏற்படும் நோய் மஞ்சள் காமாலை. இந்த நோய் உள்ளவர்கள் தொடர்ந்து நெல்லிக்காயை உண்பதால் ஈரலில் இருக்கும் கிருமிகளை அழித்து மஞ்சள் காமாலை குணமாக்கும் இந்த நெல்லிக்காய்.
நெல்லிக்காய் ஏன் சர்க்கரை நோயாளிக்கு நல்லது?
கணைய அலர்ஜியை தடுக்க நெல்லிக்காய் ஒரு பயனுள்ள மருந்தாகும். கணையத்தில் உற்பத்தியாகும் இன்சுலின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க முக்கியம். இருப்பினும் கணையம் வீக்கடையும்போது அது கணையாளர்ச்சியை ஏற்படுத்துகிறது. இது இன்சுலின் சிறக்கும் செல்களை சேதப்படுத்துகிறது அல்லது ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. ஆதலால் நெல்லிக்காய் கணையத்தின் வீக்கத்தை கட்டுப்படுத்தி இறுதியில் ரத்த சக்கரை அளவை திரும்பட நிர்வாகிக்கும். நெல்லிக்காயில் குரோமியம் உள்ளது இது கார்போஹைட்ரேட் வளர்ச்சியை மாற்றத்தை ஒழுங்கு படுத்துகிறது அல்லது உடலை இன்சுலின் மிகவும் பதில் அளிக்க கூடியதாக ஆகிறது ரத்த சக்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.
நெல்லிக்காய் குழந்தைகளுக்கு நல்லதா?
நெல்லிக்காய் குழந்தைகளுக்கு நல்லது நெல்லிக்காய் இன்று கிடைக்கும் சத்தான பழங்களில் ஒன்று கருதப்படுகிறது உண்மையில் இது குழந்தைகளுக்கு மற்றும் பெரியவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது அவர்கள் காலையில் தினமும் நெல்லிக்காய் உட்கொள்வதால் எந்த பாதிப்பும் இல்லை. நெல்லிக்காய் சாற்றுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் எந்த பாதிப்பும் கிடையாது. அதிகமாக சாப்பிடுவது அஜீரணத்திற்கு வழிவகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
நெல்லிக்காய் தீமைகள்
நம் உடலுக்கு பல ஊட்டச்சத்துகளையும் பல நன்மைகளையும் அளிக்கக் கூடியது நெல்லிக்காய். இதனால் உடலில் நோய் பாதிப்புகள் இருப்பவர்கள் நெல்லிக்காயை அடிக்கடி எடுத்துக் கொள்வது நல்லதல்ல. இந்த நெல்லிக்காயில் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்து இருந்தாலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளும் போது சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி லோ பிரஷருக்கு கொண்டு வரும் இதனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாரம் ஒரு முறை நெல்லிக்காய் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நெல்லிக்காய் சாப்பிடும் போது சர்மத்துக்கு அதிக அளவு பலன் கிடைத்தாலும் நெல்லிக்காய் எடுத்துக் கொள்ளும் போது சருமத்தில் உள்ள வரட்சியை அதிகப்படுத்தும்.
கர்ப்பிணி பெண்கள் நெல்லிக்காயை தினமும் சாப்பிடுவதை விட வாரத்திற்கு இரண்டு முறை எடுத்துக் கொள்வது நல்லது.
_____________________________________________________________________
"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"
_____________________________________________________________________



Comments
Post a Comment