Top 50 பாட்டி வைத்தியம் இயற்கை மருத்துவம் | Top 50 Patti Vaithiyam in Tamil

 

பாட்டி வைத்தியம் இயற்கை மருத்துவம்..! | Patti Vaithiyam in Tamil


நம் முன்னோர்கள் நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே பல நோய்களை குணப்படுத்தினர். அவர்கள் மருத்துவ குணம் கொண்ட உணவுகளையே அதிகம் உணவில் சேர்த்துக்கொண்டனர்.

நம் பாட்டி சொல்லும் வீட்டு வைத்தியங்கள் அனைத்தும் விரைவில் பயன்தர கூடியதாக இருக்கும். பாட்டி வைத்தியம் (Patti Vaithiyam in Tamil) மூலம்  எந்தெந்த நோய்களை குணமாக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

இயற்கை மருத்துவ குறிப்புகள் – Iyarkai Maruthuva Kurippugal


1. பசி எடுக்க பாட்டி வைத்தியம்

புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

2. நெஞ்சு சளி கரைய பாட்டி வைத்தியம்

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

3. தலைவலி நீங்க பாட்டி வைத்தியம்

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

4. வயிற்று வலி குணமாக வீட்டு வைத்தியம்

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

5. அஜீரண பேதிக்கு பாட்டி வைத்தியம்

மிளகை வறுத்துப் பொடி பண்ணி திரிகடி பிரமாணம் தேனில் கொள்ளத் தீரும்.

6. சீதபேதி சரியாக பாட்டி வைத்தியம்

மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

7. வண்டுகடிக்கு பாட்டி வைத்தியம்

வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சமூலம் அரைத்த விழுது எலுமிச்சங்காயளவு எடுத்து ½ படி பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிடக் கரப்பான், வண்டுக்கடி இவை நீங்கும்.

8. பித்தம் குறைய பாட்டி வைத்தியம்

4 அல்லது 5 வெங்காயத்தை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர பித்தம் குறையும்.

9. பாட்டி வைத்தியம் இருமல்

இலவங்கப்பட்டை ஒன்றரை பலம் வால்மிளகு கால் பலம் பொடித்து 3  வேளை நெய்யில் கலந்து  சாப்பிட இருமல் தீரும்.

10. மூக்கடைப்பு சரியாக பாட்டி வைத்தியம்

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

11. வரட்டு இருமல் நீங்க பாட்டி வைத்தியம்

எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.

12. தொண்டை கரகரப்பு சரியாக பாட்டி வைத்தியம்

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

13. சேற்று புண்ணிற்கு பாட்டி வைத்தியம்

மருதாணி இலையை அரைத்து பூச குணமாகும்.

14. சீதபேதிக்கு பாட்டி வைத்தியம்

நாட்டுச் சர்க்கரையும், நெய்யும் கலந்து சாப்பிட தீரும்.

15.முடி உதிர்வதை தவிர்க்க பாட்டி வைத்தியம்

நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.

16. வேர்க்குரு நீங்க பாட்டி வைத்தியம்

சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.

17. நெருப்பு சுட்ட புண்ணிற்கு பாட்டி வைத்தியம்

வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணிந்து ஆறும்.

18. தேமல் மறைய பாட்டி வைத்தியம்

கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.

19. தொண்டை நோய்க்கு பாட்டி வைத்தியம்

கடுகை குடிநீர் செய்து தேன்விட்டு உள்ளுக்கு கொடுக்க தொண்டை நோய் நீங்கும்.

20. பொடுகு குணமாக பாட்டி வைத்தியம்

வெள்ளை மிளகு (அ) நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்குத்தடவி குளித்து வந்தால் பொடுகு வராது.

21. உடல் பருமன் குறைய பாட்டி வைத்தியம்

ரோஜாப்பூ, வெள்ளை மிளகு, சுக்கு ஆகியவற்றை தலா 50 கிராம் எடுத்து அரைத்து காலை மற்றும் மாலை இரு வேளை சாப்பிட உடல் பருமன் குறையும்.

22. முகப்பரு நீங்க பாட்டி வைத்தியம்

சாதிக்காய், சந்தனம் மற்றும் மிளகு ஆகியவற்றை அரைத்து முகத்தில் தடவி வர முகப்பரு குறையும்.

23. முதுகு வலி நீங்க பாட்டி வைத்தியம்

பவழ மல்லியின் இலையை மண் சட்டியில் போட்டு வதக்கி 2 டம்ளர் தண்ணீர் விட்டு அது 1 டம்ளர் ஆகா குறையும் வரை கொதிக்க வைத்து காலை மற்றும் மாலை குடித்து வர முதுகு வலி குறையும்.

24. நீரிழிவு நீங்க பாட்டி வைத்தியம்

தொட்டாற்சுணுங்கி இலையையும், வேரையும் உலர்த்திப் பொடித்து பாலில் 4-8 கிராம் சேர்த்துக் கொடுக்க நீரிழிவு நீங்கும்.

25. வாய் நாற்றம் சரியாக பாட்டி வைத்தியம்

சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

26. வீக்கத்திற்கு ஒற்றடம்

நொச்சி இலையை வதக்கி ஒற்றடமிட வீக்கம், கீல்வாயு தீரும்.

27. விக்கல் நிற்க பாட்டி வைத்தியம்

நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

28. அஜீரணம் சரியாக பாட்டி வைத்தியம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

29. பித்த வெடிப்பு நீங்க பாட்டி வைத்தியம்

கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

30. தேமல் சரியாக பாட்டி வைத்தியம்

வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

31. தீப்புண் குணமாக கை வைத்தியம்

வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

32. மூலம் குணமாக பாட்டி வைத்தியம்

கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

33. மூச்சுப்பிடிப்பு சரியாக பாட்டி வைத்தியம்

சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

34. உதட்டு வெடிப்புக்கு பாட்டி வைத்தியம்

கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

35. வாயு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம்

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

36. பால் சுரக்க

பால் சுரக்கவும், பால் கட்டி உண்டாகும் முலை வீக்கத்தை கரைக்கவும் வெற்றிலையைத் தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்துக் கட்டலாம்.

37.  தழும்பு மறைய பாட்டி வைத்தியம்

வேப்பம்பட்டைக் கியாழத்தைக் கலக்கி அதில் வரும் நுரையை தடவி வரலாம்.

38. புழுவெட்டு குணமாக பாட்டி வைத்தியம்

அரளிச் செடியின் பாலை புழுவெட்டுள்ள இடங்களில் தடவி வர மயிர் முளைக்கும்.

39. நகச்சுற்று குணமாக பாட்டி வைத்தியம்

வெற்றிலையுடன் கற்சுண்ணாம்பு சேர்த்தரைத்து சீழ்கோர்த்த நகச்சுற்றுக்கு பூசலாம்.

40. வாயு கலைய பாட்டி வைத்தியம்

வெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்றி பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த வாயு கலையும்.

41. குடற்புண் சரியாக பாட்டி வைத்தியம்

மணத்தக்காளி கீரையைச் சமைத்தோ, மணத்தக்காளிப் பழத்தை வற்றல் செய்து உணவுடன் சேர்த்து தினந்தோறும் உண்டுவர வயிற்றுப்புண் குணமாகும்.

42. தோலில் ஊறல், தடுப்பு இவற்றிற்கு பாட்டி வைத்தியம்

ஏலரிசி பொடியை வல்லாரை இலைச்சாறு விட்டு அரைத்து காயவைத்து பின் கொட்டைக் கரந்தையை நிழலில் உலர்த்தி பொடித்து, இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்து வேளை 2 கிராம் வீதம் 3 வேளை உண்ண வேண்டும்.

43. தாய்ப்பால் சுரக்க பாட்டி வைத்தியம்

ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் கொண்டு பாலில் காய்ச்சி உண்டால், பாலில்லாத பெண்களுக்கு பால் உண்டாகும்.

44. நீர்க்கடுப்பு எரிவு தீர பாட்டி வைத்தியம்

எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெய்யும் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு, எரிவு தீரும்.

45. இரத்த சிறுநீருக்கு பாட்டி வைத்தியம்

மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணித்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுக்க இரத்த சிறுநீர் குணமாகும்.

46. தொண்டை புண்ணிற்கு பாட்டி வைத்தியம்

நவாச்சாரத்தை கோழிமுட்டை வெண்கருவில் அரைத்து தொண்டைக்குழியில் தடவ தீரும்.

47. கைநடுக்கம் தீர பாட்டி வைத்தியம்

தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலைமாலை பசும்பாலில் 15 நாள் சாப்பிட தீரும்.

48. உடல் எடை அதிகரிக்க பாட்டி வைத்தியம்

பூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.

49. தாய்ப்பால் சுரக்க கீரை பாட்டி வைத்தியம்

கோவை இலையை நெய்யில் வதக்கி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி, கால் வயிறு கீரை, காலையில் உண்டு விட்டு ஆகாரம் சாப்பிடவும். இவ்வாறு 3 நாள் செய்ய பால் சுரக்கும்.

50. முகப்பொலிவிற்கு பாட்டி வைத்தியம்

உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

51. பல் ஈறு, வீக்கம், வலிக்கு பாட்டி வைத்தியம்

கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.

52. படர்தாமரைக்கு பாட்டி வைத்தியம்

அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.

53. மயக்கம் நீங்க கை வைத்தியம்

ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.

54. மாதவிடாய் சோர்வு நீங்க பாட்டி வைத்தியம்

கோதுமை கஞ்சியை மாதவிடாய் இருக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால், உடற்சோர்வு நீங்கி பலம்பெறும்.

55. ஆண்மை பெறுக பாட்டி வைத்தியம்

தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வர ஆண்மை பெருகும், தாது விருத்தியாகும்.

56. நரம்பு தளர்ச்சி சரியாக பாட்டி வைத்தியம்

அத்திபழம் தினந்தோறும் 5 சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி சரியாகும்.

57. பாட்டி வைத்தியம் குழந்தை

வெற்றிலைச் சாறுடன், தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வரும் கக்குவான் இருமல் குணமாகும்.

58. பல்லில் புழுக்கள் நீங்க பாட்டி வைத்தியம்

சிறிது வேப்பங்கொழுந்து எடுத்து, நன்றாக பற்களின் எல்லாப் பகுதியிலும் படும்படி மென்று சாப்பிட வேண்டும்.

59. அல்சர் சரியாக பாட்டி வைத்தியம்

சோற்றுக் கற்றாழையின் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால் அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

60. சர்க்கரை நோய் குணமாக பாட்டி வைத்தியம்

சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்தயத்தைப் அரைத்து தினம்தோறும் ஒரு கரண்டி சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன்படுத்தலாம்.

*******************************************************************************

"This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"

*******************************************************************************

Comments

Popular posts from this blog

நாவல் பழத்தின் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..? நாவல் பழம் பயன்கள் (Navapalam Benefits)..! அதிக அளவு நார்ச்சத்து கொண்டது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பலத்தை பற்றி காண்போம்.

பூனைக்காலி விதை பயன்கள் பூனைக்காலி விதை பொடி செய்யும் முறை இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம்.

நெல்லிக்காய் பயன்கள் மற்றும் தீமைகள் | Nellikai Benefits in Tamil, நெல்லிக்காய் மருத்துவ பயன்கள்