சமைக்காத உணவில் இவ்ளோ பயன்களா, சமைக்காத உணவில் நிறைந்திருக்கும் அற்புத நன்மைகள் மற்றும் பச்சையாக உணவுகள் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள் என்று வல்லுநர்கள் கூறுபவை பற்றி இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

சமைக்காத உணவுக்கான நன்மைகள்


        கற்காலத்தில் சமைக்காத உணவுகளை சாப்பிட்டு வந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. ஆனாலும் இன்றைக்கு இருக்கும் எந்தவொரு பெருவியாதிகளும் அந்தக்காலத்தில் இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை. இதற்குக் காரணம் அவர்கள் சாப்பிட்டு வந்த சமைக்காத உணவுகள் தான் என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத்தில் முன்னேற்றப் பாதையில் உணவு


        அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத்தில் முன்னேற்றப் பாதையில் செல்லும் மனித இனம், வாழ்க்கை முறையில் முற்காலத்தை நோக்கி பயனித்துக் கொண்டிருக்கிறது. பசுமை புரட்சி எனும் பெயரில் செயற்கை உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தி அதிக மகசூல் ஈட்டிய அதே மனித இனம் தான் தற்போது மீண்டும் இயற்கை விவசாயத்தை நாடி செல்கிறது. 

        நவீன மருத்துவத்தில் பல்வேறு முன்னேற்றங்களை கண்டு வரும் அதே வேளையில் பாரம்பரிய மருத்துவத்தை நோக்கி மக்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், சமைத்து சாப்பிடும் உணவை தவிர்த்து பச்சையாக உணவுகளை எடுத்துக் கொள்ளும் உணவு முறை தற்போது பிரபலமாகி வருகிறது.

        சமைப்பதன் மூலம் உணவுகளில் ஊட்டச்சத்துகள் குறையும் என்பதால் பச்சையாக உணவுகள் எடுத்துக்கொள்வதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர். பச்சை காய்கறிகள், பழங்கள் மட்டுமின்றி சுத்திகரிக்கப்படாத பால், சமைக்கப்படாத இறைச்சி மற்றும் முட்டைகளையும் சிலர் எடுத்துக்கொள்கின்றனர்.

பச்சையாக உணவுகள் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள் என்று வல்லுநர்கள் கூறுபவை:



நார்ச்சத்து

        சமைத்த உணவுகளுடன் ஒப்பிடும் போது சமைக்காத உணவுகளில் நார்ச்சத்து மிகுதியாக காணப்படுகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள், காய்கறிகள் ஆகியவை உடல் எடை குறைக்க உதவும். மேலும், ரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும்.

பதப்படுத்தப்படாத உணவு

குளிர்பானம், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சிப்ஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளில் கலோரி அதிகமாக இருப்பதால் அவற்றை உண்பவர்களுக்கு உடற்பருமன், நீரிழிவு நோய், உயர் ரத்தக் கொழுப்பு ஆகியவை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பச்சை உணவுகள் பதப்படுத்தப்படாதவை என்பதால் அவற்றால் நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு.

ஊட்டச்சத்து குறையாது

உணவு சமைக்கப்படும் போது ஊட்டச்சத்துகள் இழக்கப்படும். ஆனால், சமைக்கப்படாத உணவுகளில் ஊட்டச்சத்துகள் பாதுகாக்கப்படும். எடுத்துக்காட்டாக அரிசியைக்கழுவினால் அதன் மேல்புறத்தில் நிறைந்திருக்கும் வைட்டமின் பி தண்ணீரில் கரைந்து வீணாகிவிடும். இதேபோல்தான் காய்கறிகள். அவற்றை நறுக்கியபின் தண்ணீரில் கழுவும்போது அத்தியவசிய உயிர்ச்சத்துகள் நீங்கிவிடுகின்றன. மேலாக காய்கறிகளை கழுவிவிட்டு பச்சையாக சாப்பிடுவதால் சத்துகள் குறையாமல் கிடைக்கும்.

குடல் நுண்கிருமிகள் பாதுகாக்கப்படும்

குடலில் உள்ள நுண்கிருமிகள் நம் உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்பவையாகும். சமைக்கப்பட்ட உணவுகளால் குடல் நுண்கிருமிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 

***********************************************************************************

"This Content Sponsored by Genreviews.Online

Genreviews.online is One of the Review Portal Site

Website Link: https://genreviews.online/

Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"

***********************************************************************************************


Comments

Popular posts from this blog

நாவல் பழத்தின் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..? நாவல் பழம் பயன்கள் (Navapalam Benefits)..! அதிக அளவு நார்ச்சத்து கொண்டது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பலத்தை பற்றி காண்போம்.

பூனைக்காலி விதை பயன்கள் பூனைக்காலி விதை பொடி செய்யும் முறை இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம்.

நெல்லிக்காய் பயன்கள் மற்றும் தீமைகள் | Nellikai Benefits in Tamil, நெல்லிக்காய் மருத்துவ பயன்கள்