சமைக்காத உணவில் இவ்ளோ பயன்களா, சமைக்காத உணவில் நிறைந்திருக்கும் அற்புத நன்மைகள் மற்றும் பச்சையாக உணவுகள் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள் என்று வல்லுநர்கள் கூறுபவை பற்றி இங்கு அறிந்து கொள்ளுங்கள்.
சமைக்காத உணவுக்கான நன்மைகள் கற்காலத்தில் சமைக்காத உணவுகளை சாப்பிட்டு வந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. ஆனாலும் இன்றைக்கு இருக்கும் எந்தவொரு பெருவியாதிகளும் அந்தக்காலத்தில் இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை. இதற்குக் காரணம் அவர்கள் சாப்பிட்டு வந்த சமைக்காத உணவுகள் தான் என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத்தில் முன்னேற்றப் பாதையில் உணவு அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத்தில் முன்னேற்றப் பாதையில் செல்லும் மனித இனம், வாழ்க்கை முறையில் முற்காலத்தை நோக்கி பயனித்துக் கொண்டிருக்கிறது. பசுமை புரட்சி எனும் பெயரில் செயற்கை உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தி அதிக மகசூல் ஈட்டிய அதே மனித இனம் தான் தற்போது மீண்டும் இயற்கை விவசாயத்தை நாடி செல்கிறது. நவீன மருத்துவத்தில் பல்வேறு முன்னேற்றங்களை கண்டு வரும் அதே வேளையில் பாரம்பரிய மருத்துவத்தை நோக்கி மக்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், சமைத்து சாப்பிடும் உணவை தவிர்த்து ...