சிறுதானியங்கள் பெயர்கள் மற்றும் பயன்கள் | சிறுதானியங்கள் எத்தனை வகை இன்றைய பதிவில் சிறுதானியத்தின் வகைகள் அதன் பயன்களை பற்றி தெரிந்துகொள்வோம். நம் வீட்டில் உள்ள முன்னோர்கள் ஆரோக்கியமாகவும், அழுத்தமாகவும் இருப்பார்கள். அவர்கள் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்று நினைத்திருக்கீர்களா.! அந்த காலத்தில் உள்ளவர்கள் எல்லாம் சத்தான உணவுகளை தான் சாப்பிடுவார்கள். ஆனால் இன்றைய அவசர கால கட்டத்தில் இருப்பதால் பாஸ்ட் புட் தேடி செல்கிறோம் சாப்பிட்டால் போதும் என்று நினைக்கிறார்கள். ஆரோக்கியமாக இருப்பதற்கு என்ன சாப்பிட வேண்டும் என்று யோசிப்பதில்லை. நம் தாத்தா, பாட்டி மாதிரி எல்லாம் ஆரோக்கியமாக இருக்க நினைத்தால் ஒரு வகை தானியமாவது உணவில் சேர்த்து கொள்ளுங்கள். தானியத்தின் வகைகளும் அதன் நன்மைகளும் படித்து தெரிந்து கொள்ளுவோம். சிறுதானிய வகைகள் பெயர்கள் | Siruthaniyam Benefits in Tamil இன்றைய கால கட்டத்தில் சிறு தானியம் என்றாலே பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. ஏனென்றால் உணவில் அதிகம் சேர்ப்பதில்லை. சுவையாகவும், சீக்கிரமாகவும் உணவு செய்ய வேண்டும் என...